Thursday, January 6, 2011

தமிழ் இசை சிம்மாசனம் யாருக்கு?

அன்பு நண்பர்களே !

இந்த வாரம் குமுதத்தில் படித்தேன் கமலஹாசன் தன்னுடைய மன்மதன் அம்பு இசை வெளீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடம் வெகு நாட்களுக்கு நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது, அதை தேவி ஸ்ரீ ப்ரசாத் தான் நிரப்புவார் என்று கூறி இருக்கிறார். உலகமே ஒப்புக் கொண்டது ஏ.ஆர்.ரஹ்மான் தான் அந்த இடத்தை நிரப்பி இருக்கிறார் என்று, ஆனால் கமல் அவர்கள் ஏனோ அதை ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியே ஆயினும் முன்பே சாதித்த இன்னும் சாதித்து கொண்டு இருக்கிற இசை அமைப்பாளர்களை சொல்லாமல் இவரை பற்றி சொல்வது கொஞ்சம் மிகை படுத்துவது போல் தோன்றுகிறது.

மேலும் இதை பற்றி மற்ற இசை அமைபாளர்களிடம் கேட்டதற்கு அவர்கள் நோ கமெண்ட்ஸ் என்று கூறி விட்டார்கள். எனவே நண்பர்களே நாமாவது இந்த விசயத்தைப் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் வலைத்தளம் வழியாக.

இவண்,

உங்கள் அன்பு நண்பன்,
கதிரவன் (உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக).

1 comment:

  1. that's not true.ARR is next to them.DSP is also good music director but at the same time definetly he is not a person whoes gona fill that space

    ReplyDelete