Tuesday, July 1, 2014

கேன்சர் மருத்துவம் :

கேன்சர் மருத்துவம் :
90நாட்களில கேன்ஸரை குணபடுத்தும் மூலிகை கர்னாடக சிமோகா என்ற ஊரில்
கேன்ஸருக்கு நாட்டுவைத்தியம்.
கா்னாடக, சிகோமா என்ற ஊரில், 90 நாட்களில், கேன்சர் நோயை குணப்படுத்தும் நாட்டு வைத்தியா்.தினமும்
நூற்றுக்கனக்கானோா் வந்து செல்கின்றனா்.
விாிவான மற்றவிபரங்கள் அறிய இந்த கானொளியை கானுங்கள். இதை சேர்செய்து மற்றவா்களுக்கு தெரியபடுத்துங்கள். முகவரி, பெங்களுர் போய் அங்கிருந்து சிமோகா அங்கிருந்து அனந்தபுரம் அங்கிருந்து நரசிபுர.
தொடர்புக்கு,

ஈஸ்வர் குமார்-09840012852

Friday, February 15, 2013

சூரியக் கிரியா


இன்று மனித அறிவு மிகவும் செயலற்றுப் போய்விட்டது. தன்னுள் ஏற்கனவே பதிந்துள்ள நினைவுகளின் உதவியால்தான் அவன் இயங்குகிறான். நீங்கள் சேகரித்துள்ள நினைவுப் பதிவுகளின் உதவியுடன்தான் உங்கள் அறிவு இயங்கும் என்றால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படக்கூடிய குப்பைகளின் ஒரு கூட்டுக்குவியலாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்றே பொருள். அதே விஷயம் எதுவும் மாறாமல் ஆனால் பலவித கலவைகளில் உங்களுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

suryakriya, suryanamaskar

உங்களை அந்த நினைவுகளிலிருந்து வெளிக்கொண்டு வருவதுதான் ஆன்மீகத்தின் முக்கிய அம்சம். கர்மா என்பது நினைவுப் பதிவுகள். அந்தப் பதிவுகளில் நீங்கள் உங்கள் கைகளை நனைத்த கணத்திலிருந்தே உங்கள் வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளேயே நடக்கும். அந்த வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பீர்கள். எந்த இலக்கையும் அடைய மாட்டீர்கள். இந்த சுழற்சியை உடைப்பதுதான் நமது நோக்கம்.
அதனால்தான் கர்மா பற்றியும் அதிலிருந்து வெளிவருவதன் அவசியம் குறித்தும் நாம் தொடர்ந்து பேசுகிறோம். இந்த சுழற்சி உடைய வேண்டும் என்றால், உங்கள் அறிவு, நீங்கள் சேகரித்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும். அப்படி விடுபடவில்லை என்றால், அந்த சுழற்சிகள் நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அந்த நினைவுப் பதிவுகளில் எந்த அளவிற்கு ஆழமாக ஈடுபடுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் சுழற்சியின் விகிதம் குறைந்து கொண்டே போகும். இது மெதுவாக உங்களைப் பைத்தியத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
உடல் தன்மையின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை வெளிக் கொண்டுவரும் செயல்முறையில் நாம் இப்போது இருக்கிறோம். மேலோட்டமாகப் பார்த்தால் உடலளவிலான பயிற்சி போலத் தோன்றினாலும் அப்பயிற்சி ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆன்மீகப் பரிமாணத்தையும் கொண்டிருக்கிறது. அப்பயிற்சியை நாம் சூரிய கிரியா என்கிறோம்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக அனைத்துப் பிரம்மச்சாரிகளும் சூரியக் கிரியா பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்கள் பயிற்சியை பிழையில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அந்த பயிற்சியை அவர்கள் 100 சதவீதம் சரியாக செய்ய ஆரம்பித்து விட்டால், பிறகு ஒரு குறிப்பிட்ட முறையில் அவர்களுக்கு சூரிய கிரியாவில் தீட்சை அளிப்போம்.
அச்சமயத்தில் அது, உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்மீக வாய்ப்பிற்கான மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயல்முறையாக இருக்கும். ஆனால் சரியான முறையில் அந்தப் பயிற்சியை செய்ய குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட கவனம் மற்றும் தொடர்ச்சியான திருத்தங்கள் தேவைப்படும். அப்போதுதான், அந்த தீட்சைக்கு பலனிருக்கும். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்த செயல்முறை. ஒரு குறிப்பிட்ட அளவிலான திறமையுடன் அந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
சூரிய கிரியா என்பது சூரிய நமஸ்காரத்திலிருந்து மாறுபட்டது. இவை இரண்டில், சூரிய கிரியாதான் உண்மையான பயிற்சி. அந்த சூரியனுடன் உங்களை ஒருங்கிணைப்பதுதான் இதன் நோக்கம். மேலும் இது மிகவும் பண்படுத்தப்பட்ட ஒரு பயிற்சியாக இருப்பதால், உடலளவில் அதிகப்படியான கவனம் தேவைப்படுகிறது.

suryakriya, suryanamaskar

சூரிய கிரியா ஒரு நகரவாசி என்றால் சூரிய நமஸ்காரம் அந்த நகரவாசியின் ஒரு கிராமத்து உறவினர் போல. சூரிய சக்தி கிரியா என்று ஒரு பயிற்சி உள்ளது. இதனை அந்த நகரவாசியின் தூரத்து உறவினர் என்று சொல்லலாம். நீங்கள் வலுவான உடல் தசைகளைப் பெற விரும்பினால், உடலளவில் திடகாத்திரமாக இருக்க விரும்பினால், வெறும் ஒரு உடற்பயிற்சி போல நீங்கள் இந்த சூரிய சக்தி பயிற்சியை செய்ய முடியும்.

உடல் பலம் மற்றும் உடல் தகுதி பெற விரும்பினால், இதயம் வலுவாக இருப்பதற்காக மூச்சுடன் இணைந்த பயிற்சி செய்ய விரும்பினால், அதே நேரத்தில் அந்த பயிற்சியில் ஓரளவு ஆன்மீக வாய்ப்பும் சேர்ந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்யலாம். நீங்கள் செய்யும் உடல் ரீதியான பயிற்சியில் ஒரு பலமான ஆன்மீக செயல்முறையும் சேர்ந்து இருக்க வேண்டுமென்றால், நீங்கள் சூரிய கிரியா செய்ய வேண்டும்.
சூரியன் என்று நாம் பேசும்போது, இந்த பூமிக்கு அடிப்படை சக்தி மையமாக இருக்கக்கூடிய சூரியனைப் பற்றிதான் பேசுகிறோம். இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களும் – உங்களையும் சேர்த்து – எல்லாமே சூரிய சக்தியினால்தான் இயங்குகிறது. சூரியனின் சுழற்சி என்பது ஒவ்வொரு பன்னிரண்டே கால் அல்லது பன்னிரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். நீங்கள் இந்த சுழற்சியை நடத்தவும் முடியும் அல்லது அதனால் நசுக்கப்படவும் முடியும்.
மனித உடலை உருவாக்குவதில், சூரியன், சந்திரன், பூமி ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய கிரியா, சூரியனின் சுழற்சியை பயன்படுத்தி உங்கள் உடலை பன்னிரண்டே காலிலிருந்து பன்னிரண்டரை வருடங்களுக்கான சுழற்சிக்கு கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வுடன் கவனித்தால், உதாரணமாக, நீங்கள் பூப்பெய்திய நாளிலிருந்து நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் திரும்பத் திரும்ப உங்களுக்கு நடப்பதை கவனிக்க முடியும்.
உங்கள் மனநிலையும், உணர்ச்சி சூழ்நிலையும் திரும்பத் திரும்ப சுழற்சியாக நடப்பதை கவனிக்க முடியும். ஒருவர் 12 வருட சுழற்சியில் இருக்கலாம், மற்றோருவர் 6 வருடங்களோ, 3 வருடங்களோ, 18 மாதங்கள், 9 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் சுழற்சியில் கூட இருக்கலாம். அந்த சுழற்சி 3 மாதங்களுக்கும் குறைவானதாக இருந்தால், அவருக்கு நிச்சயம் மனநிலை மருத்துவம் தேவை என்று அர்த்தம்.

suryakriya, suryanamaskar

ஒருவர் தனக்குள் நடக்கும் சுழற்சியின் காலத்தைப் பொறுத்து தனது உடல்மன நலத்தில் திடமான ஆரோக்கியம் மற்றும் சமநிலையிலிருந்து முழுமையான சீர்குலைவு வரை கவனிக்க முடியும்.
பெண்கள் சந்திரனுடன் சற்று அதிக இணக்கத்தில் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஒரு பெண்ணிற்குள், சூரிய சுழற்சியை விட சந்திர சுழற்சியே அதிக பங்கு வகிக்கிறது. அதன் காரணத்தினால் பெண்கள், சூரிய சுழற்சியை விட சந்திர சுழற்சியையே அதிகமாக கவனிக்கலாம்.
ஆனால் மனித உடலின் அடிப்படைத் தன்மையே முக்கியமாக அந்த சூரிய சுழற்சிக்கு இணங்கியிருப்பதுதான். எனவே, இந்த சூரிய சுழற்சி, உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் உங்கள் வாழ்க்கை எந்த விதத்திலும் தங்குதடையில்லாமல் நடப்பதற்கான வாய்ப்பை நோக்கி உங்களைக் கொண்டு செல்கிறது.
8, 10, 15 வருடங்களாக சாதனா செய்யும் இந்த பிரம்மச்சாரிகள், நான்கு மாதங்களாக ஒரு முனைப்பான பயிற்சி திருத்தத்திற்க்குப்பின், உடலின் வடிவியலை சரியாகக் கொண்டுவர என்ன தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொண்டார்கள். இவர்களில் பலர், 15 வருடங்களாக சூரிய நமஸ்காரத்தை செய்து வருவதுடன் தாங்கள் சரியாக செய்து வருவதாக நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.
பொதுவாக அவர்கள் சரியாகத்தான் செய்து வருகிறார்கள். ஆனால் உடலின் வடிவியலை சரியாகக் கொண்டு வருவதென்பது எளிதான காரியமல்ல. அதை மட்டும் நீங்கள் சரியாக்கிவிட்டால், இந்த பிரபஞ்சத்தையே உங்களுக்குள் இறக்குமதி செய்ய முடியும். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது.
மீண்டும், மீண்டும் சீர்படுத்துவதன் மூலம் இறுதியில் அப்பழுக்கற்ற நிலையை அடைய முடியும். அந்த நிலைக்கு வந்துவிட்டால், பிறகு ஒரு ‘செயல்முறையின்’ மூலம் அதை தீப்பற்ற வைக்க முடியும். அந்த செயல்முறையைத்தான் நாம் ‘தீட்சை’ என்று சொல்கிறோம். பின்னர் அந்த செயல்முறை உடல் நலம், மன நலம் அளிக்கும் ஒரு மகத்தான பயிற்சியாகவும், சூரிய சுழற்சியை கடப்பதற்கான சக்திவாய்ந்த ஒரு முறையாகவும் மாறும்.
அன்பும் அருளும்,
Sadhguru

இந்தக் காதல் எந்த வகை?


இந்தக் காதல் எந்த வகை?

 
 
உயிரை விட்ட காதலர்களை கண்டிருப்போம், கூடிப் பிரிந்த காதலர்களை பார்த்திருப்போம், கூடாமலே பிரிந்த காதலர்களையும் பார்த்திருக்கிறோம்தானே? படித்துவிட்டு சொல்லுங்கள் இந்த காதலர்கள் எந்த வகையென்று?

ஒரு நாள் அக்கா மஹாதேவியைக் காண நேர்ந்த அரசர் ஒருவர், அக்காவின் பேரழகைக் கண்டு, கதிகலங்கிப்போய் அவரை தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார். அக்காவோ அந்த அரசரை மணமுடிக்க மறுத்தார். “என்னை மணக்காவிட்டால், உன் பெற்றோரைக் கொன்று விடுவேன்”, என அரசன் மிரட்ட, இருவருக்கும் கட்டாயத்தின் பெயரில் திருமணம் நடந்தது.
திருமணம்தான் நடந்தது, ஆனால் அக்காவோ அரசரை உடலளவில் தொலைவிலேயே வைத்திருந்தார். அரசர் அக்கா மஹாதேவியை தன்பால் கவர்ந்திட பல முயற்சிகள் செய்தும், மஹாதேவி “நான் உனக்கு மணமுடிக்கப்படவில்லை. என் திருமணம் சிவனோடு எப்பொழுதோ நடந்துவிட்டது, அவர் வந்து என்னை சந்தித்து கொண்டிருக்கிறார், நான் அவரோடுதான் இருக்கிறேன். நான் உன்னோடு வாழ முடியாது,” என்றே சொல்லி வந்தார்.
கொதித்திடும் கோபத்தில் கொந்தளித்த அரசன், “நீ யாருடனோ மணமுடித்திருந்தால், என்னோடு உனக்கென்ன வேலை? நீ அணிந்திருக்கும் அத்தனையும் என்னுடையது. உன் உடைகள், நகைகள், எல்லாமே என்னுடையது. எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு போய்விடு,” என்று குமுறினார்.

நாட்கள் செல்லச் செல்ல, அரசரால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் முடிவு செய்தார். “இதுபோன்ற ஒரு மனைவியுடன் இருப்பதன் அர்த்தம்தான் என்ன? பார்த்திராத யாரோ ஒருவனை, தன் கணவனாக நினைத்து வாழும் ஒரு கிறுக்கியை, எப்படி மனைவியாகக் கொண்டு வாழ்வது?”
அந்த காலத்தில் முறையான விவாகரத்தும் இருந்திருக்கவில்லை. என்ன செய்வதென்றே புரியாத அரசர் மனஉளைச்சலால் நொறுங்கிப் போயிருந்தார். அதனால் அக்கா மஹாதேவியை அரசவைக்கு வரவழைத்து, என்ன செய்வதென்று சபையை முடிவெடுக்க சொன்னார். அவையினர் தன்னை விசாரித்தபோது, அக்கா தன் கணவர் வேறெங்கோ இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.
அக்கா சொன்ன வார்த்தைகளெல்லாம் பிரம்மையிலிருந்து உதித்தவை அல்ல. அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவருடைய அனுபவத்தில் 100% உண்மையாகவே இருந்தது.
சபையில் இவ்வளவு பேருக்கு முன்னால், தன் மனைவி வேறெங்கோ இருக்கும் ஒருவனைப் பற்றி பேசியபடியே இருப்பதைக் கண்ட அரசருக்கு கோபம் வராமல் போகுமா? 800 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழலில், ஓர் அரசனால் தாங்கிக் கொள்ளக்கூடிய சாதாரண விஷயமாக அது இருந்திருக்குமா என்ன?
கொதித்திடும் கோபத்தில் கொந்தளித்த அரசன், “நீ யாருடனோ மணமுடித்திருந்தால், என்னோடு உனக்கென்ன வேலை? நீ அணிந்திருக்கும் அத்தனையும் என்னுடையது. உன் உடைகள், நகைகள், எல்லாமே என்னுடையது. எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு போய்விடு,” என்று குமுறினார்.
சில நூறு வருடங்களுக்கு முன்னால், இந்நாட்டில், எந்த ஒரு பெண்ணின் மனத்திலும், ‘தன் கணவன் வீட்டை விட்டு வெளியேருவது’ என்ற எண்ணம்கூட வந்திருக்க வாய்ப்பில்லை, அப்படிதான் வாழ்ந்தார்கள், வளர்க்கப்பட்டார்கள்.
18 வயதே நிரம்பியிருந்த இந்த இளம்பெண், முழுமையாக நிரம்பியிருந்த அரச சபையில், தான் உடுத்தியிருந்த உடைகள் அனைத்தையும், அங்கேயே உதறிவிட்டு சென்று விட்டாள். அன்று முதல், அவர் ஆடையுடுத்தவில்லை.
அன்றிலிருந்து சிவனைப் பற்றியும். அவர்மேல் தான் பூண்டிருந்த பக்தியை வெளிப்படுத்தியும், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடினார் அக்கா மஹாதேவி. அவருடைய அளப்பரிய பக்தியின் ஆழத்தை உணர்ந்திட இங்கே கீழே நாம் கொடுத்திருக்கும் அவரின் பாடல் ஒரு சிறு உதாரணம்:

“ஷிவனே! தயவு செய்து எனக்கு எந்த உணவும் வந்து சேராமல் பார்த்துக்கொள்!
நான் உன்னில் ஒரு பாகமாய் வந்தடைந்திட ஏங்கித் தவிக்கிறேனே,
இந்த உடலும்தான் அந்த தவிப்பை வெளிப்படுத்தட்டுமே!
நான் உண்டுவிட்டால் இந்த உடல் திருப்தி அடைந்திடுமன்றோ?
பிறகு என் தவிப்பின் வலியை இந்த உடல் எப்படி உணர்ந்திடும்?
ஆகையால் உணவெதுவும் எனக்கு கிட்டாதிருக்க அருள்செய்!
அப்படியே தவறி எனக்கு உணவு கிடைத்தால்,
அது என் வாய்க்குள் செல்வதற்கு முன் மண்ணில் விழுந்திட அருள்செய்!
என் அறிவீனத்தால் அந்த மண்சோற்றையும் நான் அள்ளினால்,
அதற்குமுன் ஒரு நாய் வந்து அதை கவ்விச் செல்ல அருள்செய்!”

- தினமும் இதுவே அக்காவின் வேண்டுகோளாக இருந்தது.
பக்தர்கள் என்பவர்கள் முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இருப்பவர்கள். அவர்கள் தன் ஒற்றைக் காலினைதான் இந்த உலகில் ஊன்றி இருக்கிறார்கள். அவர்கள் வாழும் விதமும், அவர்கள் இருப்பிற்குரிய சக்தியும், முற்றிலும் வேறொரு உலகத்தைச் சேர்ந்தது.
இது தெய்வீகக் காதல் அல்லவா?